இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இனிமேல் சலுகைகளை தர முடியாது : டிரம்ப்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இனிமேல் சலுகைகளை தர முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியா மாகாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இருநாடுகளும் வளரும் நாடுகள் என்ற நிலையில் இல்லை என்றும் வளர்ந்த நாடுகளாகி விட்டன என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

உலக வர்த்தக அமைப்புடன் அமெரிக்கா நடத்திய வர்த்தக மோதல்கள், சுற்றுச்சூழல் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியது போன்ற பிரச்சினைகளில் அமெரிக்கா அடைந்த வெற்றியை பட்டியலிட்ட டிரம்ப், வளரும் நாடுகளுக்கு அதிக அளவில் வர்த்தகச் சலுகைகளை இனி கொடுக்கப்போவதில்லை என்று கூறினார்.

Related Posts