இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானின் அமைதி நடவடிக்கைகளை ஏற்க மறுக்கும் இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரும் பாகிஸ்தான் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டும் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்த இம்ரான் கான், பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக  தெரிவித்தார்.

ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என்று அவர் கூறினார்.

Related Posts