இந்தியாவை நேசிப்பதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்

 இந்தியாவை நேசிப்பதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

            அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்  ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து  விவாதம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், இன்று தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.  இந்நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று டொனால்டு டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. கூட்ட முடிவில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே  சுஷ்மாவை டிரம்பிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது சுஷ்மா,  பிரதமர் மோடியிடம் இருந்து அன்பினை பெற்று வந்துள்ளதாக டிரம்பிடம் கூறினார்.  அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த டிரம்ப், இந்தியாவை நேசிப்பதாகவும், நண்பர் பிரதமர் மோடிக்கு தனது அன்பினை தெரிவியுங்கள் எனவும் சுஷ்மா சுவராஜிடம் கூறினார்.

Related Posts