இந்தியா – அயர்லாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

அயர்லாந்து கிரிக்கெட் அணியுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி இன்று விளையாடுகிறது.

அயர்லாந்து : ஜூன்-27

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதற்கு முன்பாக அருகில் உள்ள அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அதன்படி, இந்தியா – அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று 8.30 மணிக்கு நடைபெறுகிறது. அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு அண்மையில்தான் ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தது. இதனையடுத்து, பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் அயர்லாந்து கிரிக்கெட் அணி பங்கேற்று வருகிறது. அண்மையில் பாகிஸ்தானுடனான ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து அணி சிறப்பாக விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts