இந்தியா – சிங்கப்பூர் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியர்கள் தொழில் செய்ய சிங்கப்பூர் அரசு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் : ஜூன்-01

தெற்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தோனேசியா, மலேசியாவையடுத்து, சிங்கப்பூர் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் ஹலிமா யாகோப் மற்றும் பிரதமர் லீ லூங் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் இடையே பலமான உறவு நீடிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தியர்கள் தொழில் செய்ய சிங்கப்பூர் அரசு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

Related Posts