இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்:  நேபாள நாட்டின் குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில்  பேசிய அவர், ,

இந்தியா, சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்க ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டது எனவும்,, அதன் படி பிர்கஞ்ச்- காத்மண்ட், ரசுவகாதி- காத்மண்ட் ஆகியவற்றை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ஜெயநகர்-பிஜல்பூரா மற்றும் இந்தியாவின் பத்னாஹா, பிராட்நகர் ஆகிய பகுதிகளுக்கு  அடுத்த நிதியாண்டுக்குள் ரயில்வே சேவை செயல்படுத்தப்படும் எனவும்,  பிஜல்பூரா-பர்டிபஸ் பகுதிகளுக்கான ரெயில்வே கட்டுமான பணி விரைவில்  முடிவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இவற்றின் சேவை விரைவில் தொடங்கப்படும் எனவும், நேபாளத்துடன் இந்தியா, சீனா போன்ற நாடுகளை  இணைக்க வேண்டி, நேபாள அரசு ரெயில்வே கட்டுமான பணிகளுக்கான தொழில்நுட்ப ஆய்வுகளை முடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் ஒத்துழைப்புடனும், வரவேற்புடனும் இந்த திட்டம் செயல்பட உள்ளது எனவும்,  ரெயில்வே பாதைகள் அமைப்பது மட்டுமின்றி, வரும் நிதியாண்டில் 5 லட்சம் பேருக்கு பணிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts