இந்தியா – சீனா ராணுவத்தினரிடையே மோதல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல்போக்கை, உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்தனர்.

லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை பாங்கோங் ஏரி பகுதியில் இருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய ராணுவ வீரர்கள், பாங்கோங் ஏரி பகுதி இந்திய எல்லைக்குட்பட்டது என்று கூறி அப்பகுதியைவிட்டு வெளியேற மறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இதனையறிந்த இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டனர். லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சீனா, அண்மைக் காலமாக இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts