இந்தியா தன்னை மகிழ்விக்க வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது

வரிவிதிப்பு ராஜா’வான இந்தியா, தன்னை மகிழ்விக்க வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

            அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25-ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில், மாற்றம் செய்ய நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘வரிவிதிப்பு ராஜாவாகிய இந்தியா’ அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

            வரிவிதிப்பு ராஜா என இந்தியாவை அழைத்தற்கான காரணம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு மிக அதிகமாக இந்தியா வரிவிதிப்பதாக தெரிவித்தார். ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இந்தியாவில் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படுவதாகவும், இது அமெரிக்காவுக்கு தடையாக உள்ளது எனவும் கூறிய டிரம்ப், இதனால் தான் இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என அழைத்ததாக தெரிவித்தார். மேலும்,அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக இந்தியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது என குறிப்பிட்டார். இந்தியாவின் வரிவிதிப்பிற்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கப்படும் என எச்சரித்த நிலையில், தன்னை மகிழ்விப்பதற்க்காக இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ள இந்தியா விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Posts