இந்தியா திரும்பிய பிரதமர் மோடி : விருந்தோம்பலுக்கு நன்றி

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, அமெரிக்கர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்ததாக நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக ஒரு வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ஹூஸ்டனில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஐ.நா பருவநிலை மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஐ.நாவில் உரையாற்றிய அவர் இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் இந்தியா திரும்பினார். இது குறித்து டிவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, இந்த பயணம் சிறப்பு வாய்ந்த்தாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு அதிக முதலீட்டை பெற்றுத் தரும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, அமெரிக்கர்களின் விருந்தோம்பல் மிகச்சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Related Posts