இந்தியா – தென்ஆப்பிரிக்கா, முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது. இந்தப்போட்டியில் குயின்டன் டிகாக் தலைமையில் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பையில் படுதோல்வியடைந்ததால், இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா வீரர்களும், இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியினரும் களமிறங்க உள்ளனர். இவ்விரு அணிகளும் 13 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 8 போட்டிகளில் இந்திய அணியும், 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றிபெற்றுள்ளன.

Related Posts