இந்தியா நலம் : மத்திய அரசை ப.சிதம்பரம் குற்றசாட்டு

கும்பல் வன்முறை, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவைகளைத் தவிர மற்ற துறைகளில் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக மத்திய அரசை ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், சிறையில் இருக்கும் தன்னை சோனியாக காந்தியும், மன்மோகன்சிங்கும் வந்து சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும், தானும் திடமாகவும், பலமாகவும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் அதிகரித்திருக்கும் கும்பல் வன்முறை, வேலையில்லா திண்டாட்டம், எதிர்கட்சியினரை சிறைபடுத்துவது, ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவைகளை தவிர மற்றவைகள் அனைத்தும் சரியாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மத்திய அரசை வஞ்சப் புகழ்ச்சியில் சிதம்பரம் சாடியுள்ளது பா.ஜ.கவினரை கொதிப்படைய வைத்துள்ளது.

Related Posts