இந்தியா பாகிஸ்தானுக்கு ஐ.நா அறிவுரை

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள ஐ.நா, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுமாறு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய ஐ.நா தலைமை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், இந்தியா – பாகிஸ்தான் மீது ஐ.நா மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று கூறிய அவர், இதில் ஐ.நா தலையிடாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், மனித உரிமைகளுக்கு இருநாடுகளும் முழு மரியாதை கொடுத்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Related Posts