இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது :ட்ரெம்ப்

புல்வாமா தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு மிக, மிக மோசமான மற்றும் ஆபத்தான நிலையை எட்டியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்களை இந்தியா இழந்திருப்பதாக கூறினார். இதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சனைகள் அதிகரித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மிகவும் வலுவான ஏதோ ஒன்றைச் செய்ய இந்தியா ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள அவர், இருநாடுகள் இடையேயான உறவில், மிக, மிக மோசமான மற்றும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.. இதை தடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும், இதில் தாங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்காததால், அந்நாட்டுக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த 9 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

Related Posts