இந்தியா -பாகிஸ்தான் பதற்றம் தணிந்துள்ளது : டிரம்ப்

இந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் விவகாரத்தால் முரண்பட்டு இருந்தன என்றார். 2 வாரங்களுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல், தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்து உள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளையும் தான் சிறப்பாக அனுசரித்துச் செல்வதாகவும், இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பும் பட்சத்தில் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க உதவத் தயாராகவே இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். இதை இருநாட்டு தலைவர்களும் அறிவார்கள் என்றும் அவர் கூறினார். இரு வாரங்களுக்கு முன் ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொண்டனர். அந்த சந்திப்புக்குப் பிறகு முதல் முறையாக காஷ்மீர் விவகாரம் பற்றி அமெரிக்கா கருத்து கூறியுள்ளது.

Related Posts