இந்தியா பெற்றுள்ள முன்னிலை ஏழுமலையான் அருளால் தொடர வேண்டும்:யோகி ஆதித்யநாத்

திருப்பதி திருமலையில் நேற்றிரவு சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-க்கு  திருமலைதேவஸ்தான அதிகாரிகள்  ஆலய மரியாதையுடன் தீர்த்தப் பிரசாதம் வழங்கி கவுரவித்தனர். இதனை  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நன்மைக்காகவும் மக்களின் சுபிட்ச வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டதாக தெரிவித்தார். இன்று உலக அரங்கில் இந்தியா முன்னணியில் இருக்கின்றது எனவும்,  ஏழுமலையான் அருளால் இந்த நிலை தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்

இதேபோல் முன்னாள் மக்களவைத் தலைவர் மீராகுமாரி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார் அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்து ஆலய மரியாதைகளுடன் தீர்த்தம் பிரசாதம் வழங்கினர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாட்டு மக்கள் நலமாகவும்,  மகிழ்ச்சி யாகவும் இருக்க வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

Related Posts