இந்தியா மற்றும் இலங்கை T20 கிரிக்கெட் அட்டவணை வெளியீடு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே, 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதனையடுத்து, இலங்கை அணி வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இப்போட்டிகளானது ஜனவரி 5 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி  முதல் போட்டி ஜனவரி 5-ந் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி ஜனவரி 7-ந் தேதி இந்தூரிலும், 3-வது போட்டி ஜனவரி 10-ந் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது.

Related Posts