இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது: இந்திய கம்யூனிஸ்ட் சுதாகர் ரெட்டி

கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த

இந்திய கம்யூணிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி,  

வாஜ்பாய் அரசிற்கும் நரேந்திர மோடி அரசிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாகவும், மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என கூறினார்.

நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, சிபிஐ, வருமான வரி துறை ஆகியவை மத்திய அரசின் காட்டுப்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்ட அவர்,

பா.ஜ.க ஆட்சியில் தலித்கள் மற்றும் முஸ்லீம் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு ஏற்றவாறு பா.ஜ.க செயல்படுகிறது எனக் கூறிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிகார், தில்லி, கார்நாடக , மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்காளில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னிந்தியாவில் பா.ஜ.க வெற்றி பெறாது என உறுதிபட தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக விடம் சரண்டர் ஆகிவிட்டதாக கூறிய அவர், அவர்களது ஊழல்களை வைத்து பாஜக மிரட்டி அதிமுகவை பணியவைத்துள்ளதாகவும், அதிமுக, பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts