ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி

டாக்காவில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. வங்காள தேசம் டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத்  ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

முடிவில், இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது.

இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்,  இலங்கை அணி 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதனால் இந்தியா 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Related Posts