இந்திய அணியில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்

இந்திய அணியில் எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லி : ஜூன்-26

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், தனது காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு நிறைவுடன் காணப்படுகிறது என்று கூறினார். எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளதாக தெரிவித்த சச்சின், ஸ்விங் செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார், உயரமான பவுலரான இஷாந்த் ஷர்மா, வித்தியாசமாக பந்து வீசக்கூடிய பும்ரா, மிகவும் வேகமாக பந்து வீசக்கூடிய உமேஷ்யாதவ் என்று நல்ல கலவையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அமைந்துள்ளதாக கூறினார்.  இதில் புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Related Posts