இந்திய அணி கேப்டன்: ஹர்மன்ப்ரீத்

           மேற்கிந்திய தீவுகளில் நடைபெற இருக்கும் ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஹர்மன்ப்ரீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

      மேற்கிந்திய தீவுகளில் வரும் நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக டி20போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி,  தீப்தி ஷர்மா,  தன்யா பதியா  பூணம் யாதவ்,  ராதா யாதவ், அனுஜா பாட்டீல், ஏக்தா பிஸ்ட், ஹேம்லதா,  மன்சி ஜோஷி,  பூஜா வாஸ்ட்ராகர்,  அருந்ததி ரெட்டி.என மொத்தம் 15வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Related Posts