இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை : 12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆய்வு

12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆய்வில் இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள 12 நாடுகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரம் ஆய்வு செய்யப்பட்டது.  ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய  இந்த ஆய்வில், பகுப்பாய்வு செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாக்கெட்  உணவுப் பொருட்களும் அடங்கும். இந்த ஆய்வில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு சீனாவுக்கு அடுத்தப்படியாக, இரண்டாவது இடத்தில் இருந்தது. அவற்றில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சமையல் பொருட்களில் 100 கிராமுக்கு ஆயிரத்து 515 கேஜே ஆற்றல் இருப்பதாகவும், 100 கிராமுக்கு 7.3 கிராம் சர்க்கரை இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆற்றல், உப்பு, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள், புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவைப் பார்த்து, ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டு முறையின்படி நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இந்த தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் தயாரிப்புகள் இரண்டாவது இடத்தைப் பிடித்தன.

Related Posts