இந்திய ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி கட்டி காப்பாற்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்

கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டதும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் நாடாளுமன்ற வேட்ப்பாளர் ஜோதிமணி அறிமுக கூட்டம் நடைபெற்றது.வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன் தலைமையிலும்,குஜிலியம்பாறை வட்டார தலைவர் முரளி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சிவசக்திவேல், அப்துல் கனிராஜா, திமுக கொறடா,சக்கரபாணி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி கட்டி காப்பாற்றுவது போல் வேறு எந்த கட்சியும் செய்யவில்லை என்று தெரிவித்தார்

Related Posts