இந்திய தூதரகத்தில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்கள்

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அவர்கள் உடைத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பான வீடியோ பதிவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்த வன்முறைப் போராட்டத்திற்கு லண்டன் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Related Posts