இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மனமுருக பாடிய வீடியோ

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மனமுருக பாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

                14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 19-ந் தேதி மோதின. இந்த போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனிடையே போட்டி துவங்கும் முன்னர் இரு அணி வீரர்களும் தங்களது நாட்டு தேசிய கீதங்களை பாடுவது வழக்கம். அப்போது இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது, மைதானத்திலிருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மிகவும் உருக்கமாகவும், சத்தமாகவும் பாடினார். இதனை அவரே வீடியோவும் எடுத்து கொண்டார். கழுத்தில் பாகிஸ்தான் கொடியை அணிந்து மிகவும் உருக்கமாக இந்திய தேசிய கீதம் பாடிய அந்த ரசிகரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Posts