இந்திய பிரதமர் மோடி அரசின் கீழ் இருக்கும் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியாது-இம்ரான்கான்

இந்திய பிரதமர் மோடி அரசின் கீழ் இருக்கும் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியாது, இதனை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்றாலும், வரும் கால சூழலுக்கு ஏற்ப அணுஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாசிசம் மற்றும் இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். இது குறிப்பிட்ட பிராந்திய பிரச்னை மட்டுமல்ல, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லீம்கள் கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் போக்கு மோசமாக உள்ளதாகவும், சர்வதேச நாடுகள் இப்போதே தலையிடவில்லையெனில் இது மேலும் பரவக்கூடும் என்றும் இம்ரான்கான் டிவிட்டரில் கூறியுள்ளார்.

Related Posts