இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்தச் சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 22 பைசா குறைந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 72.03 காசுகளாக உள்ளது. இதற்கு அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறுவதே காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் இந்திய பங்கு சந்தைகளிலிருந்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து காணப்படுவதற்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனிடையே, இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 10,658 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 299 புள்ளிகள் சரிந்து 36,173 ஆகவும் உள்ளது.

Related Posts