இந்திய விமானங்களுக்கு வான்வழி பாதையை மீண்டும் திறக்க   பாகிஸ்தான் நாளை முடிவு

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன.

இந்த சம்பவத்துக்கு பிறகு, தனது வான்வழி பாதையை மூடிய பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தடை விதித்து உள்ளது.இந்த தடை காரணமாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை மீண்டும் திறந்து விடுவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணைய செய்தித்தொடர்பாளர் முஜ்தாபா பைக் தெரிவித்துள்ளார்.

Related Posts