இந்திய விமானபடையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்

பல்வேறு நவீன யுக்திகளை கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று இந்திய விமானபடையில் சேர்க்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியா உலக அளவில் அப்பாச்சி கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 16 வது நாடாக இணைகிறது. அமெரிக்காவில் இருந்து அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, தாக்குதல் வகையைச் சேர்ந்த 22 அப்பாச்சி ஏஹெச்-64 இ ரக ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக, சில ஹெலிகாப்டர்கள் ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 8 ஹெலிகாப்டர்கள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன.  விமான நிலையத்துக்கு வந்த அந்த ஹெலிகாப்டர்களுக்குத் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பொட்டு வைத்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதற்குப் பின், அவை விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த விழாவில், விமானப்படை தளதிபதி, பி.எஸ்.தனோவா, ஏர் மார்ஷல் நம்பியார் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்நாள் இந்திய ராணுவத்தின் ஒரு பொன்நாள் என ராணுவ வட்டாரம் பெருமை கொள்கிறது.

Related Posts