இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தோல்வி

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

சீனாவின் சாங்ஸாவ் நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில்இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஜப்பானின் கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். ஜப்பான் வீர்ரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத ஸ்ரீகாந்த், முதல் செட்டை 9க்கு 21 எனவும், 2வது செட்டை 11 க்கு 21 எனவும் இழந்து தொடரில் இருந்து வெளியேறினார். கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் யூஃபியை எதிர்கொண்டார். முதல் செட்டை 11க்கு 21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 21க்கு 11 என கைப்பற்றினார். இருப்பினும் மூன்றாவது செட்டை 15க்கு 21 என இழந்து தோல்வியடைந்தார்.

Related Posts