இந்தி மொழி திணிப்புக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

மத்திய அரசின் இந்தி மொழி திணிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்த அமித்ஷா, இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இந்தியை எப்படியாவது திணிக்க முயற்சி செய்வதாக சாடியுள்ளார். மத்திய அரசின் இந்த முயற்சி நிறைவேறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts