இந்துக்களின் மெக்கா அயோத்தி : ஒப்புக்கொள்ளும் இஸ்லாமிய அமைப்பு

இந்துக்களின் மெக்கா அயோத்தி என முஸ்லீம்கள் கூட ஒப்புக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நாள்தோறும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது, இஸ்லாமிய தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சாட்சிகளாக உள்ள இஸ்லாமிய அமைப்பச் சேர்ந்தவர்கள் கூட, அயோத்தி, இந்துக்களின் மெக்கா என்பதை ஒப்புக்கொள்கிறார்களே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சன்னி வக்பு வாரிய போர்டு வழக்கறிஞர், நம்பிக்கைகளின் அடிப்படையில், தங்கள் தரப்பு வாதம் நியாயம் என கூறுவதற்கு சட்டத்தில் இடமில்லை என கூறினார்.  ராமர், அல்லா இருவரும் மதிக்கப்பட வேண்டும், அவ்வாறு இல்லை என்றால் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்க முடியாது என அவர் தெரிவித்தார். அந்த இடத்தில் முஸ்லீம்கள் வழிபாடு நடத்த தடை விதிக்க முடியாது எனக் கூறிய அவர், ராம் ஜென் பூமி எனக் குறிப்பிடப்படும் அனைத்து பகுதிகளுக்கும் அவர்கள் உரிமை கோரமுடியாது என வாதிட்டார்.

Related Posts