இந்து கோவில்களில் ஆடு, மாடு பலி கொடுக்க தடை

இந்து கோவில்களில் ஆடு, மாடு பலி கொடுக்க திரபுரா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திரிபுராவில் உள்ள பழமையான மாதா திரிபுரேஸ்வரி கோவில் திருவிழாக்களில் ஆடு, மாடு பலியிடப்படுகின்றன. இந்த விழாவில் அரசு சார்பில் பலியிட ஆடு ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் சுபாஷ் பட்டாச்சார்ஜி என்பவர் திரிபுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சஞ்சை கரோல் அமர்வு விசாரித்தது. அப்போது, திரிபுரேஸ்வரி கோவிலில் ஆடு மாடுகள் பலியிடுவது பழமையான சடங்கு என்றும் அரசு தரப்பு தெரிவித்தது. இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இது போன்ற செயல்களுக்கு அரசு பணம் கொடுக்க இந்திய சட்டத்தில் இடமில்லை என்றார். மேலும், கோவில்களில் ஆடு மாடு பலியிடுவதற்கு தடை விதித்த அவர், இதனை மாநில அரசு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Related Posts