இந்து சமய அறநிலையத்துறையில் பெண் ஊழியர்களை தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்து சமய அறநிலையத்துறையில் பெண் ஊழியர்களை தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

                வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்களையும் அவர்களது குடும்பப் பெண்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இந்து சமய அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது

Related Posts