இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரிஅல்ல;மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து, நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், திமுக இந்துவிரோதக் கட்சி என அவதூறு பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் யார் என கேள்வி எழுப்பிய அவர், இந்து மத்த்திற்கும் மட்டுமல்ல எந்த மத்த்திற்கும் திமுக எதிரி அல்ல என உறுதிபட தெரிவித்தார்.

ஜெயல்லிதா மரண விவகாரத்தை வெளிகொண்டு வந்த ஓ. பன்னீர்செல்வம், தற்போது ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இதுவரை ஆஜராகவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கலைஞர் மறைந்தபோது மெரினாவில் 6 அடி நிலம் கொடுக்க மறுத்தவர்கள், காலமான பிறகும் கலைஞரை கொச்சைப்படுத்த முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் வேதனையுடன் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் அனுமதித்திராவிட்டாலும்கூட கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்திருப்போம் என அவர் கூறினார்.

Related Posts