இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து  ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 ஆக பதிவானது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து காலை 6.46 மணியளவில் கிழக்கு பகுதியில்  உள்ள மலுகு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானதாக வானிலை மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இதை தொடர்ந்து மீண்டும் காலை 7.39 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்பான் தீவின் வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Related Posts