இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

இயற்கை சீற்றத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

      இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த 28-ந்தேதி 7புள்ளி 5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 170 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனை தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது. இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தேவாலயம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் 36 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டுள்ளனர். கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தோனேசியாவுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5புள்ளி 9 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த தீவில் வசித்து வரும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts