இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி தாக்கியது

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

            புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில்  நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் மத்திய பகுதியில் இன்று 7புள்ளி 5 ரிக்டர் அளவு  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில மணி நேரத்தில், இந்தோனேசியாவை சுனாமி அலைகள் தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளது.

Related Posts