இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம்

 

இந்தோனேசியா, சில மாதங்களுக்கு முன், பயங்கர நிலநடுக்கத்தை எதிர்க்கொண்டு, ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு ஆளாகி, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு கொடுத்த சுலவேசி தீவு,  நேற்று மீண்டும் குலுங்கியிருக்கிறது.

சுலவேசி தீவின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலிருந்து, 17 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு, நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளி 8ஆகப் பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில மணி நேரங்களில், சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Related Posts