இந்தோனேசியாவில்  பயங்கர தீ விபத்து:  30 பேர் உடல் கருகி பலி

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள பிஞ்சாய் நகரில் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் தீப்பெட்டி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக தொழிற் சாலைக்குள் தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறி அடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியே ஓட தொடங்கினர்.
அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்துகொண்டதால், பலர் தொழிற்சாலைக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீர்ர்கள் தீயை அணைத்து தொழிற் சாலைக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

எனினும் 30 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாதபடி தீயில் கருகி கரிக்கட்டையாகி விட்டன. உயிர் இழந்த 30 பேரில் சிறுவர்கள் சிலரும் அடங்குவர். இதற்கிடையில் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts