இனி தவறு செய்யமாட்டோம் என உறுதிமொழி  ஏற்ற மாணவர்கள்

சென்னையில் போலீசாரால் விசாரிக்கப்பட்ட “ரூட் தல” எனப்படும் மாணவர்கள் இனி தவறு செய்யமாட்டோம் என உறுதிமொழி  ஏற்றுக் கொண்டனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் பட்டாகத்தியுடன் மோதிக்கொண்ட நிகழ்வு அதிர்ச்சிய ஏற்படுத்தியது.

பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களை சில மாணவர்கள் இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், சென்னையில் மட்டும் 90 “ரூட் தலைகள்” இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, “ரூட் தல” என்று கூறப்படும் மாணவர்கள் பலரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர், இனி தவறு செய்யமாட்டோம் என்று காவல்துறையினர் முன்பு அந்த மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Related Posts