தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை :தேர்தல் ஆணையம் 

இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. சத்தீஷ்கார்மத்திய பிரதேசம்மிசோரம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில்ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது. 2 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால்,இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது எனவும், கருத்துக்கணிப்பு தொடர்பாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ நடைபெறும் தேர்தல் தொடர்பான போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும்தேர்தல் ஆணைய அதகாரிகள் கூறியுள்ளனர்

Related Posts