இன்று முதல் தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முதல்வர் நாராயணசாமி இன்று தொடக்கி வைத்தார்.

புதுச்சேரியில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்தவில்லை என சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, இத்திட்டம் மத்திய அரசின் காப்பீடு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு தலைமை பொது  மருத்துவமனையில்  பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தற்போது புதுச்சேரியில் 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் இந்த திட்டம் மாநில அரசின் பாங்களிப்புடன் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துடன் இணைத்து  விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Posts