இன்று 30 ஆயிரத்தை தாண்டிய தங்க விலை

தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையானது, இன்று மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்திய பொருளாதார மந்த நிலை, ரூபாய் நோட்டு சரிவு மற்றும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 40 நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் 40 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 3 ஆயிரத்து 640 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலை சவரன் 30 ஆயிரத்து120 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்சம் தொட்டது. ஆனால், நேற்று மாலையே தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. காலை நிலவரப்படி, சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 3 ஆயிரத்து 753 ரூபாயாகவும், ஒரு சவரன் 30 ஆயிரத்து 24 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலையானது இன்று கிராம் 55 ரூபாயாகவும், கிலோ 55 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts