இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்: செந்தில் பாலாஜி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்  இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்திய அவர், திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

அப்போது, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோரும் திமுகவில் இணைந்தனர். 18 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்த செந்தில்பாலாஜி மீண்டும் தாய்க்கழகத்திற்கு திரும்பியுள்ளார். இணைப்பு நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் துரைமுருகன், டி,ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி,  இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் எனக் கூறினார்.

Related Posts