இம்மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டம்!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டிருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விண்ணில் செயற்கைகோளை செலுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால் இஸ்ரோ வரும் காலங்களில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறோம். வரும் டிசம்பர் இறுதியில் தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவது தான் அடுத்த இலக்காக உள்ளது. அதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

Related Posts