இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட வழக்கு – இழப்பீடு வழங்க உத்தரவு

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 பில்லியன் டாலர் இழப்பீடாக  ஈரான் வழங்க வேண்டும் என நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா : மே-02

இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜார்ஜ் பி டேனியல்ஸ் தீர்ப்பளித்தார். அதில், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஈரான் அரசு 6 பில்லியன் டாலர் இழப்பீடாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். இது இந்திய மதிப்பில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இரட்டைக் கோபுர தகர்ப்பில் ஈடுபட்டவர்கள் சவுதி மற்றும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ குற்றஞ்சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts