இரட்டை கோபுரத்தை தாக்கிய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு பயிற்சி

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தியதற்கு காரணமான தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் பயிற்சி அளித்ததாக இம்ரான் கான் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவில், இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இணைந்து பயிற்சி அளித்தது உண்மைதான் என்றார். ஆனால், தாக்குதலுக்கு பின்னர், அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டாலும், ராணுவம், தனது நிலை்பாட்டை மாற்றி கொள்ள மறுத்து விட்டதாக அவர் கூறினார். இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடனை, அபோதாபாத்தில், அமெரிக்க ராணுவம் சுட்டு கொன்றது குறித்து விசாரணை நடத்தி வருவதாக இம்ரான்கான் தெரிவித்தார்.

Related Posts