இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 72வது ஆண்டு நினைவு தினம்

 

 

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 72-வது ஆண்டு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இரண்டாம் உலகப்போர், 1939-ம் ஆண்டு தொடங்கி, 1945-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த உலகப்போரில், ரஷ்யா வெற்றி பெற்றதன் 72-வது ஆண்டு தினம்,   இன்று தலைநகர் மாஸ்கோவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாஸ்கோவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். சுமார் 16,500 பேர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் கலந்துகொண்ட இந்த அணிவகுப்பில், விமான சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இதைத்தொடர்ந்து, இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் அதிபர் புதின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  

Related Posts