விளையாட்டு

இரண்டாவது டி-20 போட்டியில் இந்தியா  அணி அபார வெற்றி

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதனிடையே நடைப்பெற்ற முதல் டி 20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்க்கு உள்ளானார்கள் .

இரண்டாவது டி 20 ஆவது இந்தியா வெற்றிப் பெறுமா என எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து நேற்று ராஜ் கோட்டில் நடைப்பெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணி முதலில் பேட்டிங்க் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ் மற்றும் முகமது நைம் நிதானமாக ஆடி வந்தன. பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். முஸ்பிகுர் ரஹீம் 4 ரன்களிலே வெளியேறினார்.

அதேபோல்,சவுமியா சர்கார் 30 ரன்னுக்கும், மெஹ்முதுல்லா 30 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. இதையடுத்து, இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக, ஷிகர் தவானும் – ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கிய ரோகித் ஷர்மா, 43 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷிகர் தவான், 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த கே.எல்.ராகுலும், ஸ்ரேயஸ் அய்யரும் நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது. இறுதி டி-20 போட்டி, நாக்பூரில் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

Show More

Related News

Back to top button
Close