இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிங்ஸ்டனில்  துவங்கியது. ‘டாஸ்’ வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது.

பின் வந்த கேப்டன் விராத் கோஹ்லியும், தான் எதிர்கொண்ட முதல் 15 பந்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. மறுமுனையில் பொறுப்பாக ஆடிய அகர்வால் கீமர் ரோச் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி டெஸ்ட் அரங்கில் தனது 3வது அரை சதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது ஹோல்டர் பந்தில் மயங்க் அகர்வால் 55 ரன்களுக்கு அவுட்டானார். நிதானமாக ஆடிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 22வது அரை சதமடித்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Posts